தனிமையும் தவிப்பும்

பெற்ற மகனை விட்டுத்
தவிக்கும் தாயிடம் சிதறிப்
பறக்குமே பெரும் சோகம் ..

தனிமைக்குத் துணையாகும்
இளமைக்கால நிகழ்வு.
தவிப்புக்கு வரவாகும்
எதிர் காலக் கனவு .

இறப்புக்கு முன் பெற்ற
மகன் முகம் தேடியே
தவித்திடும் மனம் .
தடுமாறும் வயதிலும்
தவிப்போடு வழி பார்க்கும் தினம் .

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (26-May-20, 8:14 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 150

மேலே