தாய் மடி
அயல் நாட்டில் பணி பார்த்து
வங்கி கணக்கில் லட்சம் பணம் சேர்த்து
காற்று பதனாகியில் சிலு சிலுவென காற்று வாங்கி
மெது மெதுவென பஞ்சு மெத்தையில்
உறங்கிய போது கிடைக்காத சுகம்
விடுமுறை நாட்களில் என் வீட்டு வாசலில் இருக்கும்
மரத்தடியில் அமர்ந்து - என் தாய் கையில்
ஒரு வாய் சோறு உன்று-அவள் மடிதனில் சிறிது நேரம்
உறங்கிய சுகம் கிடைக்குமா.......?