தாய்

அயர்வு வந்தால் உறங்குவதும்
பசி வந்தால் உண்பதும்
இயற்கையின் நியதியாம்! புலம்புகிறார்கள் பேதை மனிதர்கள்...
இங்கோ! அந்த நியதிக்கே சவால் விடுகிறது ஓருள்ளம்...
தெய்வங்களும் குடிகொள்ளத் துடிக்கும் பேரில்லம்...
பொறுமைக்கு பூமியாம்! அதன் உயிர்த்துடிப்பை பிடித்துப் பார்த்தார் எவருமில்லை...
ஈருயிர்த்துடிப்பை அறியாதார் பூவுலகில் எங்குமில்லை...
மாரிகூட பொய்த்ததுண்டு,
இவள் மடுவின் மழை பொய்த்ததில்லை...
வற்றாத நதிகூட காய்ந்ததுண்டு,
இவள் அன்பெனும் உள்ளம் காய்ந்ததில்லை...
உறக்கம் தொலைத்தாள்...
உண்ண மறந்தாள்...
ஆனாலும், உயிரைப் பிடித்து வைத்திருக்கிறாள் தான் ஈன்ற குழவி இன்னுயிர் வாழ இரவுபகல் பாராது உழைக்கிறாள் தாய்...!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (29-May-20, 6:02 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : thaay
பார்வை : 635

மேலே