காதல்🌹

காதல்🌹

அது ஒரு மழை காலம்.
பேருந்து நிலையத்தில்
மழையில் நினைத்த" பூ" ஒன்று
குடையில்லாமல் குளிரில் நடுங்கியது.
தண்ணீரை இருபுறமும் வாரி இறைத்த பேருந்தில் "பூ" ஏறிய பின் நானும் ஏறினேன்.
ஈரமான இருக்கைகள். தயங்கி,தயங்கி இருக்கையின் நுனியில்
"பூ" அமர்ந்தது.
அமர்வதற்கு பல இருக்கைகள் இருந்தும் என் தலைவன் பாணியில் நின்றபடியே நான்.
பேருந்து வெளியே மழை கொட்டியது.
பூவுக்கு குளிர் அடங்கவில்லை.
அவ்வப்போது உடல் சிலிர்த்து கொண்டது.
நடத்துனர் பயணச் சீட்டு கேட்க, பதட்டத்தில் பையில் இருந்து காசு எடுக்கும் போது புத்தம் சில தவறி கிழே விழ, அதை உடனே எடுத்த நான் அவளிடம் கொடுக்க
" தேங்ஸ"
என்றது மழையில் நினைந்த "பூ".
முதல் முறையாக "பூவே" புன்னகை செய்ததை பார்த்தேன்.
மழை துளிகள் இன்னமும் பூவின் மீது ஆங்காங்கே அமர்ந்திருந்தது.
புன்னகை "பூ" எழுந்தது,
பேருந்து நின்றது.
"பூ" இறங்கியது.
மனம் ஏனோ எதையோ எதிர் பார்க்க
இறங்கிய பூ ஒரு கனம் திரும்பி
என்னை பார்க்க
பூவின் அபூர்வ பார்வை பூ மழையாக
என் மீது தூவியது.
பூ வாசம் என் மேனியேங்கும் வீசியது.

யார் இந்த வண்ண மலர்.
யார் இந்த வானவில்.
யார் இந்த அழகோவியம்.
யார் இந்த அழகு சிலை.
யார் இந்த தேவதை.
யார் இந்த பேரதிசியம்.
யார் இந்த பிரபஞ்ச அழகி.

மீண்டும் அந்த பெண்னை சந்திப்பேனா?
இவள் எந்த கல்லாரி?
வண்ண மயிலே நீ யார்?
உன் மீது எனக்கு ஏற்பட்ட காதல் உணர்வு
நியாயமானதா?
உன் அந்த ஒரு பார்வை என் காதலுக்கு அச்சாரமா?
அல்லது ஏதோ ஒரு மனித அடிப்படை குணாதிசயத்தில் எழும் சம்பரதாய பார்வையா?
இருப்பினும் நான் காதல் என்ற பெரும் அவஸ்தையில் சிக்கிக்கொண்டேன்.
இது தொடரும் ....
என்னுடைய உன் தேடல் தொடரும்...
இன்று இரவு எனக்கு சிவராத்திரி...
காரணம் உன் கண்களின் பிரகாசம் என்னை தூங்க விடாது...
உன் அழகை என் மனம் ஆராதனை செய்யும்....
உன் அழகை என் பேனா பல கவிதை எழுதும்..
உன் அழகை நினைத்து என் இதயம் துடிக்கும்....
உன்னையே நினைத்து
என் உள்ளம் ஏங்கும்....
பெண்னே உன் சில நிமிட சந்திப்பு என் வாழ்க்கைகை திசை திருப்பிவிட்டதே!
அழகியே! நான் விரும்பும் என் வாழ்வின் உண்ணதமே!
என் காதலியே... இல்லை...என் உயிரே..
காதல் என்னை படாத...
பூவே உன்னை மீண்டும் சந்திப்பேனா....
- பாலு.

எழுதியவர் : பாலு (19-May-20, 11:08 pm)
சேர்த்தது : balu
பார்வை : 225

மேலே