நகைச்சுவை துணுக்குகள்
சந்தோஷமா இருக்கணும்னா வருஷத்துக்கு ஒருமுறை கம்ப்ளீட் ஹெல்த் செக் அப் செஞ்சிக்கணும்.
ஆறுமாசத்துக்கு ஒருமுறை ஹார்ட்டை செக் அப் பண்ணிக்கணும்.
எட்டு மாசத்துக்கு ஒருமுறை பிளட் டெஸ்ட் பண்ணிக்கணும்.
மூணு மாசத்துக்கு ஒருதரம் சுகர் செக் பண்ணிக்கணும்.
மாசாமாசம் BP செக் செஞ்சிக்கணும் .
ஆறுமாசத்துக்கு ஒரு தடவை கண் ரெடினாவை சரி பார்க்கணும்.
வருஷத்துக்கு ஒரு தரம் கண் டெஸ்ட் பண்ணிக்கணும்.
வருஷத்துக்கு ரெண்டு தடவையாவது காதை செக் பண்ணிக்கணும்.
காதுலே பிரச்சினை வராம இருக்க ஜலதோஷம் பிடிக்காம பாத்துக்கணும்.
அப்படி ஜலதோஷம் பிடிக்கும்போல இருந்தா, உடனேயே டாக்டரைப் போய்ப் பாத்துடணும்.
ஆறு மாசத்துக்கு ஒருதரம் கோலினாஸ்கோபி செஞ்சிக்கணும்.
வயத்துலே சின்ன கோளாறு இருக்கிற மாதிரி தோணினாக்கூட உடனே எண்டாஸ்கோபி செஞ்சிக்கணும்.
அப்புறம் சொல்ல மறந்துட்டேனே....
இன்னும் வேறே இருக்கா?
இன்னும் நிறைய இருக்கு.
அப்படி செஞ்சிக்கிட்டா?
நல்ல சௌக்கியமா சந்தோஷமா பல காலம் வாழலாம்.
யாரு? நாமா? இல்லே டாக்டரா?
********************
ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அடையாளம் ஏதாவது ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது அவனே அந்தக் கதாபாத்திரமாக மாறிடணும்.
இப்பப் புரியுது நீங்க எப்படி உங்க கதை ஒண்ணுலே நாயைக் கதாபாத்திரமா வெச்சி அவ்வளவு தத்ரூபமா அந்தக் கதையை எழுதினீங்கன்னு.
********************
கல்யாணத்திற்காக அந்தப் பொண்ணும் பையனும் பறந்துகிட்டிருந்தாங்களே. கடைசியிலே என்ன ஆச்சு?
கடைசியிலே அந்த ரெண்ணு பேரும் பறந்துகிட்டிருந்த விமானத்துலே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.
**************