நகைச்சுவை துணுக்குகள்

நம்ம நாட்டு விளையாட்டு வீரர்கள் எல்லாம் தங்கம் வெல்றதை விட்டுட்டு வெறும் வெண்கலம்தான் 'ஜெயிக்கிறாங்கங்கறதை நினைச்சா மனசுக்குக் கஷ்டமா இருக்கு.

நீங்க வேறே. தங்கத்து மேலே ஆசை வெக்காதீங்கன்னு நம்ம நாட்டிலே மகான்களிலே இருந்து அரசியல்வாதிகள் வரையிலே எல்லாரும் சொல்றதை நம்ம விளையாட்டு வீரர்கள் அப்படியே கடைப்பிடிக்கிறாங்க. இதுக்காக சந்தோஷப் படறதை விட்டுட்டு வருத்தப் படுவாங்களா யாராவது?
********************
இலை ஏன் பச்சையா இருக்கு? சொல்லு.

ஆண்டவன் அப்படி படைச்சுட்டான் சார்.

முட்டாள். அதுலே க்ளோரோஃபில் இருக்குன்னு நான் சொல்லித் தந்ததை மறந்துட்டியா?

க்ளோரோஃபில் இருந்தா ஏன் சார் இலை பச்சையா இருக்கணும்?

க்ளோரோஃபில்லோடே நிறம் பச்சையா இருக்கிறதாலே இலை பச்சையா இருக்கு.

க்ளோரோஃபில்லோடே நிறம் ஏன் சார் பச்சையா இருக்கு?

அதுலே இருக்கிற வேதிப்பொருள் பச்சையா இருக்கிறதாலே க்ளோரோஃபில் பச்சையா இருக்கு.

ஏன் சார், அந்த வேதிப்பொருள் ஏன் பச்சையா இருக்கணும்?  
....
அதுதாம்பா கடவுளோடே படைப்பு.

அதைத்தான்சார் நான் முதலிலேயே சொன்னேன்:
********************
நெத்தியிலே ஏன் இப்படி பட்டை போட்டுக்கிட்டுத் திரியறே.
பிறக்கும்போது பட்டையோடேயா பிறக்கறோம்? சிந்திச்சுப் பாரு.

அப்படிப் பார்த்தா பிறக்கும்போது நாம டிரஸ் போட்டுக்கிட்டா பிறக்கிறோம்?

எழுதியவர் : ரா. குருசுவாமி( ராகு) (24-May-20, 8:53 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 53

மேலே