லீவு
ஜெயராமின் மனைவி ஒரு அவசரக் காரியமாக அவளுடைய அம்மா வீட்டிற்குப் போய்விட்டாள். எனவே இன்னும் இரண்டு நாட்களுக்கு ஜெயராமன் ஃப்ரீயோ ஃப்ரீ. விடுதலை, விடுதலை என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஜனகராஜ்போல் நடுரோட்டில் நின்றுகொண்டு "என் பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" என்று அவனால் கத்த முடியாவிட்டாலும் மனதிற்குள் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவன் சுய கௌரவம் காரணமாக அவன் அவ்வாறு செய்யவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் ஆபீஸ் போனவன்
தனது மானேஜரைப்பார்த்து "சார், எனக்கு நாளைக்கு ஒரு நாள் லீவு வேணும் சார்" என்று கேட்டான்.
அவனுடைய ஆபீஸ் மானேஜர் ஒரு முசுடு. எப்பப் பார்த்தாலும் வேலை, வேலை, வேலை தான். சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர் ஒரு வொர்க்கஹாலிக். தமிழில் கூறவேண்டுமானால் அவர் ஒரு வேலை வெறியர். ஒரு நாள்கூட அவர் லீவு போட்டு அந்த ஆபீஸில் யாரும் பார்த்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் விடுமுறைநாட்களிலும் ஆபீஸுக்கு வந்து வேலை செய்வார். போதாததற்கு தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களையும் லீவு நாட்களில் ஆபீஸுக்கு வரச்சொல்வார்.
அவர் அவனைப் பார்த்து "நீ வேலைக்கு வந்து சேர்ந்து இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட ஆகல்லே. அதுக்குள்ளே லீவு கேக்கறே. நான் பத்து வருஷமா இந்த ஆபீஸுலே வேலை செய்யறேன். ஒரு நாள்கூட லீவு போட்டதில்லை. தெரியுமா?" என்றார்.
“இல்லை சார். தவிர்க்க முடியாத முக்கியமான வேலை இருக்கிறது. எனக்குக் கட்டாயம் லீவு தேவை" என்று மனம் கூசாமல் புளுகினான் ஜெயராமன்.
அவரும் "முடியாது" என்று பலமுறை சொன்ன போதும் அவன் அவரை விடுபவனாக இல்லை. அவர்காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடவே, மானேஜரே இவனுடைய நடிப்பைக் கண்டு ஏமாந்து
"சரி. இனிமே இந்த மாதிரி லீவு போடாதே. இதுதான் கடைசித் தடவை" என்று எச்சரித்து லீவு கொடுத்து அனுப்பினார். அளவு கடந்த சந்தோஷத்தோடு, அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான்.
"அப்பாடா. ஒரு நாளாவது வீட்டிலே ஹாய்யா இருப்போம்" என்று நினைத்தபடி வீட்டுக்குப் போனான்.
அப்போது அவனுக்குப் போன் வருகிறது.
ஆமாம். உனக்கு எப்படி நான் வீட்டிலேதான் இருக்கேன்னு தெரிஞ்சது.
நான்தான் வாசல் பக்க ஜன்னல் கதவை மூட மறந்துட்டு அபீஸுக்கு வந்துட்டேன். அதனாலே பக்கத்து வீட்டுப் பங்கஜத்துக்குப போன் பண்ணி ஜன்னலை மூடச்சொல்லலாம்னு நெனச்சேன். அவதான் சொன்னா நீங்க வீட்டுலே இருக்கிறதை….
. அதை விட்டுத்தள்ளுங்க.
"என்னங்க, நான்தான் பேசறேன். நான்அவசரமாப் புறப்பட்டதாலே சில விஷயங்கள் சொல்ல மறந்துட்டேன்.
நான் வாசல் பக்க ஜன்னல் கதவை மூட மறந்துட்டேன்.
ஆபீஸ் போகும்போது தினமும் அதை நீங்க மறக்காம மூடிடுங்க.
நீங்க வீட்டிலே சும்மாதானே இருக்கீங்க. கடைக்காரன் வீட்டு சாமான்கள் கொண்டு வந்து கொடுப்பான்.
அதைக் கரெக்டா இருக்கா, நாம கேட்ட பொருளை சரியான அளவு கொடுத்திருக்கானான்னு பாத்து செக் பண்ணி அவனுக்குப்பணம் கொடுங்க.
சரி.
(சற்று நேரம் கழித்து)
வாட்டர் கேன் ஆட்கள் தண்ணி கொண்டு வருவாங்க.
அவங்களுக்கு போன மாசம் தண்ணிக்கான பணத்தைக் கொடுத்துட்டு, தண்ணி கேனை கிச்சன் பிளாட்பாரத்துலே இடது பக்கமா சிங்குக்குப் பக்கத்துலே வெக்கச் சொல்லுங்க.அவங்க வர சமயத்துலே வெளியிலே எங்கேயும் போய்த் தொலைஞ்சிடாதீங்க.
சரி (சற்று நேரம் கழித்து) ஏங்க வீட்டிலே சும்மாதானே இருக்கீங்க. வாக்குவம் க்ளீனர் போட்டு வீட்டைக் கிளீன் பண்ணிடுங்க.
அப்படியே கிச்சன்லே இருக்கிற ஒட்டடையையும் கிளீன் பண்ணிடுங்க.
சரி. இப்படி ஒவ்வொண்ணாச் சொல்றதைவிட மொத்தமா நான் என்ன செய்யணும்னு சொல்லிடு.
மீட்டர் ரீடிங் எடுக்க வருவாங்க. அதை கவனிச்சுக்குங்க.
காய்கறிக்காரன் நம்ம ஃப்ளாட்டுக்குள்ளே வந்தா வீட்டுக்கு இந்த வாரம் நமக்குத் தேவையான காய்கறியை வாங்கிடுங்க.
முத்தலா வாங்காதீங்க. இளசாப் பாத்து வாங்குங்க.
இப்படி இன்னும் ஏகப்பட்ட கட டளைகள்
நான உடனே போட்ட லீவை கான்சல்ட் செய்துவிட்டு ஆபீஸுக்குப்போனேன்.
“எனக்கு லீவு கொடுத்த ஆபீசர் ஒரு அரைக் கிறுக்கன். இன்னிக்குக்காலைலே போன் பண்ணி அர்ஜண்ட் வொர்க். லீவ் கான்செல்ட் உடனே புறப்பட்டு ஆபீசுக்கு வரவும்னு சொல்லிட்டான். நானும் என்னால் ஆன மட்டும் புளுகிப்பாத்தேன். அவன் நம்பறதா இல்லை. அவன் நீ சும்மாதானே வீட்டிலே இருக்கே. உடனே புறப்படுன்னு சொல்லிட்டார்”
ஆமாம். அவருக்கு நீங்க வீட்டிலே இருக்குறது எப்படித் தெரிஞ்சது?.
அதான் உன் பக்கத்து வீட்டுஃரெண்ட் பங்கஜத்தோடே புருஷன். அவன் என் ஆபீசரை கிளப்லே மீட் பண்ணி இருக்கான். பேசும்போது அவன் தன்னை என்னோட நெய்பர்னு சொன்னதும் இல்லாம, நான் லீவு போட்டுட்டு, வீட்டுலே சும்மாதான் இருக்கேன்னு சொல்லியிருக்கான், வாயை வெச்சிக்கிட்டு சும்மா இருக்காம.
இதுக்குத்தான் பக்கத்து வீட்டுக்காரங்களோடே சகவசமே வெச்சிக்கக்கூடாதுங்கறது.” அப்படின்னு புளுகிட்டு ஆபீசுக்குப்புறப்பட்டேன்.
இந்த கண்ணறாவி வீட்டு வேலைக்கு ஆபீஸ் வேலை எவ்வளவோ பரவா இல்லே. அப்பப்போ சக நண்பர்களோட பேசிக்கிட்டு, கான்டீனுக்குப்போயிட்டு, ஆபீஸ் செலவுலே ஃபேன் போட்டுக்கிட்டு , சமயத்துலே ஒரு குட்டித்தூக்கம போட்டுக்கிட்டு எவ்வளவு ஜாலியா பொழுது போகும். அப்படியே நான் லீவு போடும்போது என் பெண்டாட்டி வீட்டிலே இருந்தாலும், அவ வேலையிலே பாதி வேலையை என் தலையிலை கட்டிடுவா? அது மாத்திரமா? ஷாப்பிங், சினிமா, ஓட்டல்னு ஏகப்பட்ட செலவை வெச்சிடுவா.
அதனாலேநான் இப்ப எல்லாம் என் ஆபீசர் கேட்டுக்கிட்டாக்கூட லீவு போடறதில்லே.
பாவம் இப்ப தெரியுது, ஏன் என் ஆபீசரும் லீவு போடறதில்லைன்னு.