உன் நினைவில்

கனவுகளைச் சுமந்து நடந்தேன்
உன் நினைவில்
கன்னத்தில் கண்ணீர் வழிந்தது !

கண்ணீரைச் சுமந்து நடந்தேன்
உன் நினைவில்
நெஞ்சில் கவிதை பிறந்தது !

கவிதையை சுமந்து நடக்கிறேன்
உன் நினைவில்
கவிதையும் கண்ணீர் சிந்துகிறது !

எழுதியவர் : கவின் சாரலன் (22-May-20, 1:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : un ninaivil
பார்வை : 89

மேலே