கொரோனா காலம்
விடிந்து முடிந்து கடக்கிறது நாட்கள்
அடைப்பட்டுக் கிடக்கிறது
இடைப்பட்ட நேரங்கள்
தடைப்பட்டுத் தூர்ந்து முடங்கியது வழிப்பயணம்
ஜீவனற்றக் கோளமாய் சுழல்கிறது பூமி ...????
மௌன அரக்கன் குரல்வளையை முறுக்க
நெட்டித் திமிறி நான் விடும் பெருமூச்சு
என் உயிரோட்டத்தை உறுதி செய்கிறது....
இன்னும் எத்தனை நாளோ
இந்த மயான அமைதி யுத்தம்?????