ஆறுதல்

மனதில் எழும் வேதனை

சில சமயங்களில்
யாரிடமாவது
கொட்டித் தீர்க்க
ஒரு ஆறுதலைத் தரும்...

ஆனால் சில சமயங்களில்
ஒரு மங்கிய வெளிச்சத்தில்
நிசப்தமான தனிமையில்
சத்தமில்லாமல்
வடிக்கும் கண்ணீர் மட்டுமே
ஆறுதலைத் தரமுடியும்...

எழுதியவர் : கீர்த்தி (22-May-20, 2:28 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : aaruthal
பார்வை : 406

மேலே