பெண்ணுக்குள் ஞானம் வைத்தான்
தன்னலமற்ற பொருப்பினையே
மண்ணுலகில் விதைத்திடவே
விண்ணளவில் விரித்திடவே
பெண்ணவளில் ஞானம் வைத்தான்...
தனிதிறமை அத்தனையும்
தனக்குள்ளே பூட்டி வைத்து
தலைமுறைகள் சிறந்திடவே
தானமாய் தனை அளிக்கும் -இவளுள்
ஞானத்தையும் தான் விதைத்தான்...
ஆசைகள் அத்தனையும்
ஓசையின்றி செய்து விட்டு
அம்மா என்ற வார்தைக்காய்
அவளையே அர்ப்பணித்து
குவலயம் அதுவாக
குடும்பம் அதை கருதி
வானம் போல் வாழ்ந்து வரும்
வஞ்சனி இவளுக்காய்
ஞானத்தையும் தான் விதைத்தான்...
பூப்படையும் கால முதல்
பூ முடிக்கும் காலம் வரை
மூப்படைந்து போனாலும்
களைப்படையா இவள் சேவையினால்
வியப்படைந்த ஆண்டவனும்
மதிப்புடைய ஞானத்தை - நல்
மங்கைகுள் வைத்தானோ ?