பூரண நிலவு
பௌர்ணமி நிலவு
வானில் வந்தும்
மேகத்தின் பின்னேயே
மூடிக் கிடந்தால்
வெள்ளி முளைத்து விடியலும் வந்துவிட
காணாமல் போகுமே நிலவும் பின்
நிலவின் அழகை ரசிப்பது எப்படி
ஜன்னலுக்குப் பின்னே
மூடிய உன் முகத்தைக் காட்டியே
என்னைக் கொல்கின்றாய்
பூரண நிலவாய் நீ
உன் முகத்தைக் காட்டும் நாள் எப்போது
அந்த நாளுக்காக காத்திருக்கும் நான்
உன் எதிர் வீட்டில்