எழுத்து காம்

எழுத்து.. காம்
அட்டகர்மம் எட்டும் உனக்காக செயவேன்நான்
எழுந்துசொல் உந்தன் தாராளம் கொன்றதார்
பழுதுவர பேதித்து மாரணம் செய்தார்யார்
மந்திரம் ஆக்ரஷணம் ஓதியுனை எழுப்புவேன்
மோகனத்தால் மயக்கியெம் சொல்கேட்க வைப்பேன்
உன்னை வசீகரித்து வித்வேஷ னம்சொல்லி
பேதனைக்குட் படுத்த போதித்து கட்டி
நிலையாய் தம்பனத்தால் நிறுத்துவேன
பிழையிலாஉச் சாடனத்தால் மீளப்
பழைய நிலைக்குனை வரச்செய்வேன் பார்த்திடே

எழுதியவர் : பழனிராஜன்l (23-May-20, 7:36 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 63

சிறந்த கவிதைகள்

மேலே