சொந்த ஊர் நோக்கி

சொந்த ஊர் நோக்கி

இது சுற்றுலா பயணம் அல்ல
இது யாத்திரீக பயணம் அன்று
இது உல்லாச பயணம் இல்லை
இது மானுடத்துக்கு ஏற்பட்ட  வலியால் நெடு தூர பயணம்.
பிழைப்புக்காக கிராமத்தை விட்டு நகரத்துக்கு வந்த ஏழை எளியவர்களின் பயணம்
அக்கறைக்கு இக்கறை பச்சை
என்ற எண்ணத்தில் வந்த விளிம்பு நிலை மனிதர்களின் பரிதாப பயணம்
ஏதோ வந்த இடத்தில் மூன்று வேளை சோறு கிடைத்தது
அதுவே பழகிவிடவே நகரம் நரகமானாலும் பழவிட்ட நிலையில்
இப்போது ஆஸ்திவாரத்திற்கே ஆதாரம் இல்லாமல் போனதால்
வாழ்வாதாரம் கேள்வி கூறி ஆனதால்
அரசாங்கம் ஆயிரம் அறிவிப்புகள் அறிவித்தாலும்
இவர்களின் பசியின் கொடுமையை யார் அறிவார்
குழந்தைகளின் கதறல்கள் அரசாங்கம் காதுகளில் விழுமா
இதோ கூட்டம் கூட்டமாக மூட்டை முடிச்சடன் கிளம்பி விட்டார்கள்
தன் பிறந்த ஊரை நோக்கி நடை பயணமாக
ஒரு கிலோ மீட்டர் அல்ல
ஆயிரம் கிலோ மீட்டர் தூரம்
காவலர்களே இவர்களிடம் உங்கள் அதிகாரத்தை காட்டாதீர்கள்
உங்களால் முடிந்தால் ஒரு வேளை உணவு வாங்கி தாருங்கள்
மன உறுதியுடன் தாய்மடி நோக்கி செல்லும் மானுட கூட்டமே
இனி நகரம் பக்கம் திரும்பாதீர்கள்.
காணி நிலம் இருந்தாலும் அதில் விவசாயம் செய்து கெளரவமாக
பிழைத்துவிடுங்கள்
ஆனந்தமாக வாழ்ந்துவிடுங்கள்.
இயற்கையுடன் கைகோர்த்துவிடுங்கள்.

- பாலு.

எழுதியவர் : பாலு (23-May-20, 10:40 pm)
சேர்த்தது : balu
Tanglish : sontha oor nokki
பார்வை : 326

மேலே