செவிலித்தாய்
செவிலித்தாய்
வென்னிறப் பூக்களாய், புன்னகை பூத்திட,
மலர்ந்த முகத்தோடு,வாடிய மனதினை,
தேற்றிட செப்பினாய் ஆறுதல் நீயே !!!
செட்ட செட்ட குருதி புரண்டோடிட,
இருவிழி அகன்று கவனம் பிறழா,
புண்மாய பெதியிடும் வீர்ரும் நீயே !!
மசக்கை முத்திட மழலை துடித்திட,
வலியின் உச்சத்தில் கரங்களை பற்றிட,
தெம்பினை தந்த தகப்பனும் நீயே !!
சிவப்பு கம்பளம்மிட்டு மழலை மலர்ந்திட,
கரம்மேந்தி அழுகையின் அழகினை கண்டு,
புன்சிரிப்பில் வாழ்துதி தந்தவர் நீயே !!
முறிவின் வேதனை ஏனோ உயிர்நீத்திட,
வென்குருதி விழியொழுக, உன்விழி கான, ,
ஊக்கம் தந்த தாயும் நீயே !!
உலகம் பிரியும் இறுதிநொடிகள் நகர்ந்திட,
யாரும் அற்ற அணதையாய் உணர்ந்திட,
உறவின் உருவாய் நிற்பது நீயே !!
ஓர்மொழியுன்டோ உன் சேவையை கூறிட,
வரியுன்டோ உம் வலியினை புரிந்திட,
உம் சேவையால் வர்த்தைகளற்ற ஊமைகளனோம் !!
இங்ஙனம்
தௌபீஃக்