வெட்கமில்லாமல்... !

அந்நாளில்...!
தெரு முனையில்
குப்பைத் தொட்டியில் உள்ள
குழந்தையை பார்த்தபோதும்...!
அதே தெருவில்
குமறிக் கொண்டிருக்கும்
ஒரு குடும்பத்தை பார்த்தபோதும்...!
பாதை ஓரத்தில்
படுத்திருக்கும் பல்லுப்போன
பாட்டியை பார்த்தபோதும்...!
பக்கத்து தெருவில் பஞ்சத்தால்
பதறிக் கொண்டிருக்கும்
பாமர மக்களை பார்த்தபோதும்...!
நானும் போகிறேன்
வெட்கமில்லாமல்... !!!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (3-Aug-10, 4:24 pm)
சேர்த்தது : R.Ravi
பார்வை : 724

மேலே