இருக்கிறனா தமிழன் ?

தாகத்திற்கு தண்ணீர் கேட்டால்
மோரையும் தந்து
விட்டு திண்ணையிலும்
இடம் கொடுத்து
இளைப்பாற செய்வோம் அன்று!!!!!!!!

இல்லை என்று வந்தவருக்கு
போதும் போதும் என்று பொருளை
கொடுத்து அனுப்பினோம் அன்று!!

உதவி என்ற குரல் கேட்டதும்
வந்து நிற்போம் அன்று!!!

தமிழன் என்ற பெருமையில்
மிதந்தோம் ! அன்று!!!

ஆனால்,இன்றோ ?
நாம் சொந்தங்கள்
பசி,தண்ணீர்,இடம்
அனைத்தையும் இழந்து

சொந்த நாட்டில்
அகாதிகளாக வாழ்ந்து

இருக்கிறனா தமிழன் ?

நாம் உதவியை கண்ணில் கண்ணிருடன்
எதிரிநோக்கி நிற்கிறார்கள்

தமிழ் மண்ணே !தமிழனே
நாம்
அனைவரும் கைகள் இருந்தும்
ஊனமாகி நிற்கிறோம் இன்று!!!

நாம் உறவுகளை கை கொடுத்து
கரை ஏற்ற முடியாமல்
நீயும்,நானும்
தமிழன் என்று சொல்வதில்
அசிங்கம் இல்லையா?

இந்த நிலை மாறும்
என்றாவது ஒரு நாள்
நிச்சயம்,
தமிழன் கை கொடுப்பான்
என்ற நம்பிக்கையில் இருக்கும்
இலங்கை தமிழ் சொந்தங்களை
நீயும்,நானும்
எமற்றமால் இருந்தால் சரி

இலங்கை தமிழன்
என்பதை மறந்து
இல்லை இங்கே தமிழன்
என்று மாறாமல்
இருத்தால் வேண்டும் அதுவரை


எழுதியவர் : திவ்யா (3-Aug-10, 8:16 pm)
சேர்த்தது : dhivya
பார்வை : 632

மேலே