வலி தந்த வரிகள்

பொற்கொல்லன்
சொன்ன வார்த்தைகளை
ஆராய்ந்து பாராமல்
அப்படியே ஏற்று
கோவலனைக்
கொன்றான்
பாண்டிய மன்னன்,
முடிவில் மன்னனும் இறந்தான்,
மதுரையும் எறிந்தது போல்

நேர்மையானவனென்று
பேரெடுத்த இராமன்
வாலியை அழைத்து
விசாரிக்காமல்
அநுமன் கூறியதை
அப்படியே ஏற்று
வாலியைக் கொன்றது
இராமாயணக் காதைக்கு
வலி தந்த வரிகள்

எழுதியவர் : கோ. கணபதி. (29-May-20, 8:32 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 186

மேலே