நிலவு

'காதலர் நெஞ்சிற்கின்னமுதே நீ
வெண்ணிலவே!
காதலன் நான் .../....என் காதலியை
நீயாக பாவித்தேன்
நிந்தன் ஒளியில் திடும்
அவள் முகத்தைக் கண்டு
வானமெனும் நீல தடாகத்தில்
பூத்து துலங்கும் ஒற்றைத் தாமரை நீ
ஒற்றை வெண்தாமரை நீ வெண்ணிலவே
உந்தன் படர் தேசு உலகிற்கே தண்ணொளி
பரப்பும் என்றால் ..... இதோ இவள்
என் காதலி முகம் கூட மதிமுகமே
எனக்கு மட்டுமே இல்லை எனக்கு மட்டும்தான்
தரும் தண்ணொளி
நீயோ நிலவே என்றுமே
என் கற்பனைக்கு கருவூலம்
என்னையும் ஓர் கவிஞனாக்கிய
வானத்து பால்நிலவு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-May-20, 3:39 pm)
Tanglish : nilavu
பார்வை : 67

மேலே