என்ன தவம் செய்தேனோ

காலமெல்லாம் தோள் கொடுத்த
காளைகளும் பால் கொடுத்த
பசுக்களும் சிந்தும் கண்ணீர்
குளிப்பாட்டும் பன்னீராய்

நட்ட பிள்ளை அணிவகுத்து
பெற்ற பிள்ளை முன்நடக்க
மூங்கிலுடன் பச்சை ஓலை
தூங்குவதற்கு தாலாட்ட

செல்லும் வழியெங்கும் பசும்
புற்கள் கம்பளம் விரிக்க
தேனீக்கள் பண் இசைக்க
மாமரங்கள் மலர்தூவ

அன்னையிடம் கருவாய் உதித்து
மண்ணில் எருவாய் விதைக்க
என்ன தவம் செய்தேனோ
உழவு செய.

எழுதியவர் : ராமகிருஷ்ணன் (1-Jun-20, 12:23 am)
பார்வை : 502

மேலே