அரசியல்வாதி

அரசியல்வாதி.
-----
சுயநலத்தின் உச்சம்
பொது நலம் அவனுக்கு எச்சம்!!

ஆசையின் கூடாரம்
பேராசையின் பிள்ளை!!

பசு தோல் போர்திய புலி
வாஞ்சையாக பேசி வஞ்சனை செய்யும்
தந்திரக்காரன்.

மங்கையை தங்கை என்பான்
மாதவம் செய்திட வேண்டும் என்பான்
மயக்கி மஞ்சத்திற்கு அழைத்திடுவான்.

வானத்தை வில்லாக வளைப்பதாக சொல்வான்
குடிசையை கோபுரம் ஆக்குவேன் என்பான்
வாய் சொல்லில் வீரன் அவன்
காலி பெருங்காய டப்பா
பெரியார் சொன்ன வெங்காயம் அவன்.

இனிக்க இனிக்க இன் சொல் பேசி
மணக்க, மணக்க மாய வார்த்தை கூறி
அழைத்திடுவான் ஓட்டு போட
மந்திரிச்சு விட்ட கோழி போல்
நாமும் போடுவோம் வோட்டு
வெற்றி பெற்ற பின்
அவன் வைத்திடுவான் வேட்டு.

கடமை, கன்னியம் கட்டுப்பாடு இவற்றையல்லாம்
காற்றில் பறக்க விட்டு
ஐயமில்லாமல் ஐந்தே வருடத்தில் பல தலைமுறைக்கு சேர்த்திடுவான் சொத்து.

மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத அவனுக்கு பல பல்கலைக்கழகம் போட்டி போட்டு
தரும் டாக்டர் பட்டம்
அதை பார்த்து கைதட்டும் ஒரு கைக்கூலி கூட்டம்.

படிப்பறிவு இல்லாதவன்
பண்பு இல்லாதவன்
சுயபுத்தி இல்லாதவன்
சொந்த புத்தி இல்லாதவன்
எதுவுமே இல்லாதவன்
அவனே அரசியல்வாதி.
---- பாலு.

எழுதியவர் : பாலு (31-May-20, 3:56 pm)
சேர்த்தது : balu
Tanglish : arasiyalvaathi
பார்வை : 437

மேலே