ஓம் முருகா
(அ)மைதி ததும்பிடும்
மனம் கொடுத்திட்டு முருகா ..!!
(ஆ)சைக் கொன்ற
குணம் கொடுத்திடு முருகா..!!
(இ)டர் பல வந்தும் அது
தொடரா காத்தருளிடு முருகா ..!!
(ஈ)கை செய்யும்
எண்ணம் விதைத்திடு முருகா..!!
(உ)ள்ளம் எங்கும்
உன் நாமம் பதித்திடு முருகா ..!!
(ஊ)னம் இல்லா
பண்பை தந்திடு முருகா ..!!
(எ)ளிய வாழ்வு வாழ
நெறிதன்னை வகுத்திடு முருகா..!!
(ஏ)க்கம் சிறிதும் இல்லா
ஏற்றம் வைத்திடு முருகா ..!!
(ஐ)யமற்ற திடமான
நெஞ்சம் செய்திடு முருகா,..!!
(ஒ)ற்றுமை என்றும்
இறவா உறவை காட்டிடு முருகா..!!
(ஓ)ர் நொடிப்பொழுதும்
உன்னை மறவா மனம் படைத்திடு முருகா ..!!
(ஓள)வ்வை காட்டிய ஆன்மிக
வழியில் நடக்க வைத்திடு முருகா ..!!
உள்ளம் உருகி
உன்னை நித்தம் நினைந்து
கண்ணீரில் உனக்கு
செய்கிறேன் அபிஷேகம்
முருகா..!!
ஒருமுறையேனும்
உன் திருமுகம் காட்டி
உன் பார்வையால்
என் பாவங்களை களைந்து
என்னை மனிதனாக்கிடு
முருகா ..!!
முத்துக்குமரா...!!
என்றும் உன் துதிப்பாடி
என்றும் ..என்றென்றும் ..
ஜீவன்...🍁🍁