நாவின் வலிமை

நல்லதை நவிலத்தான் நமக்கு
நாவளித்தான் இறைவன்
நல்லவையே படித்திட
படித்தப் பின் அதற்கேற்ப
வாழ்வை நடாத்த
நல்லவையே பாடி மகிழ
இறைநாமம் என்னும் நல்லவை
அவைப் பாட மற்றோரையும்
பாடவைக்க ...இப்படி நாவைப்
பழக்கிட நாம் சொல்வதெல்லாம்
சித்தன் வாக்காய் திகழும் நிகழும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jun-20, 1:22 pm)
Tanglish : naavin valimai
பார்வை : 122

மேலே