சாலையோர வியாபாரிகளின் குரல்

சென்னையின் சாலையோர வியாபாரிகள் நம்மை உரிமையோடு அழைப்பார்கள்...

அண்ணே... வாங்கண்ணே

ஒரு டீ சாப்பிட்டு போங்கண்ணே...

அண்ணே... வாங்கண்ணே

சூடா பஜ்ஜி போண்டா இருக்கு சாப்பிடுங்கண்ணே

அண்ணே... வாங்கண்ணே

நீங்க கேட்ட டீ-சர்ட் வந்துருக்கு , வந்து பாருங்கண்ணே, பிடிச்சிருந்தா வாங்கிங்கண்ணே...

அண்ணே... வாங்கண்ணே

சூடான மசாலா கடலை இருக்கு சாப்பிடுங்கண்ணே

அண்ணே... வாங்கண்ணே

நல்ல கம்பெணி பிராண்டு 'சூ-செப்பல் ' வாங்கிக்கண்ணே

அண்ணே... வாங்கண்ணே

எது எடுத்தாலும் 30 ரூபாய்ண்ணே.. பிடிச்சிருந்தா வாங்கிங்கண்ணே...

அண்ணே... வாங்கண்ணே

இட்லி, தோசை, பூரி, வடை சூடாயிருக்கு சாப்பிடுங்கண்ணே

அண்ணே... வாங்கண்ணே

வெங்காயம்- தக்காளி- கீரை எல்லாம் ஃபிரஷ் இருக்கு வாங்கிக்கண்ணே..

அண்ணே... வாங்கண்ணே

மல்லி, கணகாம்பரம், சாம்பந்தி இருக்குண்ணே... அக்காவுக்கு வாங்கிட்டு போண்ணே...

இப்படி - பல சாலையோர வியாபாரிகள் நம்மை அன்போடு அழைப்பார்கள்...

எதுவும் இலவசம் இல்லை...
ஆனால் நம்மை அன்போடு அழைப்பார்கள்...

இதில் நாம ரெகுலர் கஷ்டமர் என்றால் ,
கொஞ்சம் பொருள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்...

இந்த சாலையோர வியாபாரிகளின் குரல்களை கேட்காமல்...
செவிகள் இன்று நிசப்த ஒலியை கேட்கின்றது....
அந்த நிசப்த ஒலியில்...
அந்த வியாபாரிகளின் வறுமையொளி அதிகளவில் கேட்டு உணரப்படுகின்றது...

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (5-Jun-20, 5:31 am)
பார்வை : 162

மேலே