மனசுக்குள் மழைச்சாரல்

மனசுக்குள் மழைச்சாரல்
**********************

நிஷாவும் வழமைக்கு மாறாக விண்ணில் மிதப்பது போலவே சந்தோசக் களிப்பிலே ஓடித்திரிந்தாள். அந்தநேரம் அவளின் அம்மா சிவானி அந்திசாயும் நேரம் சம்மந்தி குடும்பத்தினர் வருவார்கள் வெளியில் எங்கும் சென்றுவிடாதே.
அத்தோடு வீட்டில் நிறைய வேலைகள் இருக்கிறது அதையெல்லாம் செய்யவேண்டுமென்று கூறி முடித்தாள்.
அப்போது நிஷாவும் தாயைப்பார்த்து எனக்கு திருமணமாவென ஏக்கத்துடன் முகம் சுளிக்கத் தென்றல்கள் ஒன்று சேர்ந்து புயலைக் கொடுத்து மனதைக் குழப்புவது போல குறுக்கிட்டது அம்மாவின் வார்த்தை.
மனம் நொந்த வண்ணம் தன் அறையில் சென்று தலையணையை மார்போடு வைத்துகொண்டு அழுது கொண்டாள்.
நேற்றுத்தானே அவரோடு நிறைய நேரம் காதல் கனவுகளை பற்றிப் பேசியிருந்தேன். அதில் எத்தனை அழகிய கனவுகள் நினைவுகள் இனிமைகள் அதிலே எப்படியெல்லாம் ஆசையை வளர்த்து இருப்பார். இப்பொழுது இன்றைக்குப் போய் மறுப்பதா? என்னை பற்றி என்னை நினைப்பார்? என்னாலே முடியாது முடியாது அவரில்லாமல் என்னால் வாழமுடியாது. நிம்மதி அனைத்தையும் இழந்தாள். ஐயோ கடவுளே நானென்ன செய்யப் புலம்பினாள்.

அதன்பின் சிறுமாற்றம் வரவேண்டும் மனதிலே என்ன செய்யலாம் சிந்தனையோடு முகநூல் வலைத்தளத்திற்கு சென்று உலாவிக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது சந்தைக்கு சென்று வந்த நிஷாவின் அப்பா சிவானியை நோக்கி மகளெங்கே அவளைக் கூப்பிடு என்று சொல்லவும் அப்பாவின் நிலைமையைப் புரிந்து கொண்டவளாய்
நிஷாவின் அம்மாவும் நிஷா நிஷா அப்பா வந்துவிட்டார். அவருக்கு
தேநீர் போட்டுக் கொண்டு வா. எனக்கு நிறைய வேலையிருக்கிறது என்று கூறவும் சினம் கொண்டவளாய் சரியம்மா கொண்டுவாரேன் என்று முணுமுணுத்தபடி அடுப்பங்கரைக்குச் சென்று ஏதோ ஏதோ நினைவுகளுடன் அரைகுறையாக தேனீரை தயாரித்து அப்பாவிடம் கொடுத்தாள். அப்பாவும் மகளின் தேநீர் அருமையாக இருக்கும் தானேயென்று அருந்தினார். இன்று தேநீரில் சீனியுமில்லை சுவையுமில்லை.
என்ன நடந்தது மகளுக்கு சரி சரி பிறகு கேட்போம். என்று நினைத்து நகர்ந்து சென்றார்.
இப்படியே நேரமும் கடந்து அந்திப் பொழுதும் வந்தது அவர்களுடைய மகன் நிஷாந்தனின் நண்பர்கள் அனைவரும்
ஒவ்வொருவராக வந்து சேந்துவிடவே சோர்வின்றி வீடு கலகலப்பாக களைகட்டி இருந்தது.
ஆனால் மகள் நிஷாவின் மனமோ அந்தரமாய் அகிலமெங்கும் பறந்து கொண்டு இருந்தது. அப்பொழுது நிஷாவின் வாடிய முகத்தைக் கண்ட நிஷாந்தனின் நண்பன்
டேய் நிஷாந்த் ஏனடா உன்னுடைய தங்கை பேய் பிடித்தவள் போல இருக்கிறாளென்று வினாவ, எனக்கும் தெரியலையடா பொறு கேட்போம் என்றுவிட்டு
ஆவலோடு நிஷாவை கூப்பிட்டு உரையாடத் தொடங்கினான்
உன்னுடைய அண்ணாவின் திருமண நிச்சயநாள் இன்றைக்கு
இன்றைக்கு முகத்திலே பெரிய மாற்றமாய் இருக்கிறாய்.
ஒரே சோகமாய் இருக்கிறாய். எதையோ பறிகொடுத்தவள் போல இருக்கிறியே ஏன்? என்னவாக இருந்தாலும் சொல்லி விடு உந்தன் அண்ணாவுக்கு. கூறி முடிக்க மனதிலே நினைத்த வண்ணம் உனக்கா திருமண நிச்சயநாள் இன்று
இதை அறியாமல் இருந்துவிட்டேன். ஆஹா மன்னிக்கவும் அண்ணா. ஆனந்தக் கண்ணீரை சிந்திய ஒன்றுமில்லை அண்ணா சமாளித்த
வண்ணம் இதோ வந்து விடுகிறேன் என்று மனதில் மழைச்சாரல் போல இனிமை கொண்டு நடனம் ஆடத் தொடங்கினாள்.

எழுத்தாளர் அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (5-Jun-20, 9:38 am)
பார்வை : 376

மேலே