முண்டா அண்டா

அம்மா எனக்கு நிரந்தர வேலை பீகார்ல. ஒரு தனியார் கம்பெனி. என் கல்வித் தகுதிக்கு ஏற்ப உயர் பதவி. கார், பங்களா எல்லாம் தர்றாங்க.
@@@@@@
மகராசானா போயிட்டு வாடா மகனே.
@@@@
இரண்டு வருசத்துக்கு முன்னாடி உங்க பேரன் பொறந்தான். நம்ம தமிழர்கள் எந்தப் பையனுக்கும் யாரும் வைக்காத புதுமையான பேரா அவனுக்கு வைக்க ஆசைப்பட்டேன். ஆங்கில நாளிதழ்ல 'ராம்நாத் முண்டா'ன்னு ஒரு பேரைப் பாத்தேன். நம் தமிழ் நாட்டிலகூட ராமநாதன்-ங்கிற பேரு உள்ளவங்க அவுங்க பேரை 'ராம்நாத்'-ன்னு வச்சுக்குறாங்க. ஆனா முண்டா-ங்கற பேரை உலகத்தில் எந்த தமிழ் குழந்தைக்கும் யாரும் வைக்கில. அதனாலதான் எம் பையனுக்கு 'முண்டா' -ன்னு பேரு வச்சேன். அந்த புதுமையான இந்திப் பேரக் காதில கேட்டவங்க எல்லாம் "வாட் எ ஸ்வீட் நேம். ஃப்யூட்டிஃபுல்" சொல்லறாங்க. உங்க மருமகள் இப்ப நிறைமாத கர்ப்பிணி. அடுத்த வாரம் பிரசவம். ஆண் கொழந்தையோ பெண் குழந்தையோ. சுகப்பிரசவம் ஆனாப் போதும். நான் நாளைக்கே விமானத்தில பாட்னா போறேன். மருமகளை நல்லா கவனிச்சுக்காம்மா.
@@@@@
ஏன்டா உனக்கு அக்கா தங்கச்சி கெடையாது. நீ எனக்குப் பொறந்த ஒரே பையன். உன் மனைவி, எம் மருமக எனக்கு பெத்த பொண்ணு மாதிரி. சரி கொழந்தை பொறந்தா அதுக்கு என்ன பேரு வைக்கிறது?
@@@@@@
முண்டாவுக்கு சமமான இந்திப் பேரா வைக்கணும். இல்லன்னா எதாவது மனசில பட்ட பேரை வச்சுட்டு அது இந்திப் பேருன்னு சொல்லிட்டா போச்ச. மக்கள் அந்தப் பேரை அருமையான பேருன்னு பாராட்டுவாங்க.
@@@@@
முண்டா. அதுக்கு பொருத்தமான பேருன்னா 'அண்டா' இல்லன்னா 'குண்டா'-ன்னு வச்சத்தான் சரியா இருக்கும்.
@@####
சரிம்மா. அப்பிடியே செய்யுங்க. எல்லாருகிட்டயும் அது இந்திப் பேருன்னு மறக்காம சொல்லிடுங்க.
@@@@@@#
சரிடா மகனே.

எழுதியவர் : மலர் (5-Jun-20, 11:15 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 57

மேலே