எங்கிருந்தாலும் வாழ்க கண்மணியே

நினைவிருக்கிறதா உனக்கு..!
ஒரு மழைக்கால...
மாலை வேளை..!
தூரத்தில் நீ வருகிறாய்...
என் தெருவின்
மின் விளக்குகள்...
கண்சிமிட்டுகின்றன..!
உன்னைப் பார்த்து...
மழைநீரில்...
முகம் கழுவியபடி..!

அருகில் நீ...
கடக்கையில்...
கடைக்கண் விரித்தாய்...
அட...!
உன் இமைகள்
என்ன சிறகுகளா...?!
நீ அசைத்ததும்...
நான் பறக்கிறேனே..!!

நீ கடந்து போன பின்னும்...
உணர முடிகிறது என்னால்...
என் தெருவின் காற்றில்
உன் சுவாசத்தின் மிச்சத்தை.

வசந்தம் வந்து போனதாய்..
என் வாசல் தெளிக்கிறது...
மழைநீர்..!

ஒற்றை வார்த்தை இல்லை...
ஆனால்...
எல்லாம் சொல்லி போனாய்..

உண்மைதான்...
நீ சொன்னது...
ஒத்துவராது நமக்குள் என்று.

ஏனென்றால்- நீ...
வாழத் தெரிந்தவள் - நானோ...
பிழைக்கத் தெரியாதவன் - உன்
பார்வையில்..

பரவாயில்லை...
இப்படியே
இருந்துவிட்டுப் போகிறேன்..

வாழ்க்கையில்
சில இழப்புகள் தான்...
ஆகச்சிறந்த
ஆசான்கள் ஆவார்கள்..

நதிகள்...
எப்பொழுதும் யாருக்காகவும்...
ஓரிடத்தில்...
நின்று விடுவதில்லை...
அது போல்தன் நானும்.

எழுதியவர் : (5-Jun-20, 11:07 am)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 49

மேலே