கொலை விழிக்காரி

உன்
பாதச் சுவடுகள்...
முடிகின்ற இடத்தில்...
தொடங்குகின்றது...
எனது தேடல்.

எல்லாரும்...
எதையாவது...
தொலைத்துவிட்டு தான்... தேடுவார்கள்.
நானோ...!
தொலைந்து போக...
தேடுகின்றேன்...
உன்னில்.!

எல்லோரும்...
தெரியாமல் தான்... விழுவார்கள்.
நானோ...!
தெரிந்தே...
விழுகிறேன்...
உன் விழிகளில்.!

உன் ஓர விழி பார்வைகள்
என்னில்
உடுருவி பாயுதடி...!!!
கொலை விழி பாவையடி நீ...!

------- -------

எழுதியவர் : மருத கருப்பு (5-Jun-20, 10:57 am)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 122

மேலே