பயணங்கள் முடிவதில்லை

முடிவில்லா ஒன்றை நோக்கி...
அவரவர் வழியில்...
தொடர்கிறது பயணங்கள்.

சிலது புதிய பாதைகள்...
சிலது போடப்பட்ட பாதைகள்...
சிலரது கரடுமுரடானது...
வெகு சிலருக்கு மட்டும்- விரும்பிய வகையில்..

பாதைகள்..
பலவகையாயினும்..
சேருமிடம் ஒன்றுதான்...
ஆம்..
அனைவருக்கும்
ஒன்றுதான்...
காலநேரம் மட்டும்
வேறுவேறு...

தூரங்களும்...
துயரங்களும்...
அவரவருக்கு ஏற்றார்போல்...

அதுபோல்..
எல்லாம் பயணமும்...
இனிதே முடியவில்லை...
சிலது சோகமாகவும்...
சிலது விடுதலையாகவும்..

வெகு சிலருக்கு மட்டும்
தொடர்கதையாக....

இடை நிறுத்தங்களில்...
உடன் வருபவர்..
இறங்கியும் போகலாம்..
மற்றவர்களது மட்டும் தொடரும்...

முடிந்த வரை...
யாரையும் காயப்படுத்தாமல்,
எல்லோருக்கும் உதவியாய்
பயணிப்போம்...

எழுதியவர் : Marudha karuppusamy (5-Jun-20, 11:17 am)
சேர்த்தது : மருத கருப்பு
Tanglish : thodarum payanangal
பார்வை : 97

மேலே