காதல் கவிதை

நினைவு தெரிந்த நாள் முதல்
பார்த்து பழகிய என் கண்களுக்கு
வெறுப்பாய் தோன்றிய உன் முகம்
ஏனோ இன்று சற்று மறுமுறை பார்க்க தோன்றி உன் கண்களுக்குள் என் பிம்பம்
கண்டு மீள முடியாமல்
விட்டு சென்கிறேன் என் இதயத்தை
வேறு எண்ணம் தோன்றவில்லை
உன் கண்ணில் என்னை பார்த்த பின்பு
எங்கோ ஒலிக்கின்ற உன் குரல்
கேட்டு அதிவேகமாக துடிக்கும் என்
இதயம் காதல் கொண்டு
உன்னிடம் அதை சொல்ல தயங்கி
என்னுள்ளே நான் உன்னை காதலித்து
உன் ஒவ்வொரு வார்த்தையும் சேகரித்து மனதுக்குள்ளே உன்னை நினைத்து
வாழும் இந்த இன்பம் போதும் என் ஆயுள் வரை.

எழுதியவர் : பானுப்பிரியா (7-Jun-20, 11:20 am)
சேர்த்தது : Banupriya
Tanglish : kaadhal kavithai
பார்வை : 120

மேலே