அடுத்த படம்
அண்ணே படம் எடுத்து நாளாச்சு. நாம எந்தத் தலைப்பில படம் எடுத்தாலும் யாரு கதாநாயகனா நடிச்சாலும் நாம தயாரிக்கிற படமெல்லாம் வசூலை அள்ளிக்கொட்டுது.
@@@@@@
ஆமாம்டா தம்பி. மக்கள் மறந்துபோன சொற்களைத் தலைப்பா வச்சுப் படம் எடுத்தா நல்லா ஓடும். அது மாதிரி தலைப்பைத்தான்டா தேடிட்டு இருக்கிறேன்.
@@@@@@@
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தியேழுக்கு அப்பறம் பல புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கனினாம். ஜில்லா மாவட்டம் ஆச்சு. மக்கள் மறந்து போன அந்தச் சொல்லைப் ஒரு படத்துக்கு தலைப்பா வச்சு படம் எடுத்தாங்க. அந்தப் படம் நல்லா ஓடி வசூலை அள்ளிக் கொட்டுச்சு. மாகாணம் மாநிலம் ஆச்சு. இன்னும் அதைத் தலைப்பா வச்சு யாரும் படம் எடுக்கல. நாம இன்னிக்கே தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போயி 'மாகாணம்' நம்ம படநிறுவனம் தயாரிக்கும் படத்தலைப்புனு பதிவு பண்ணீட்டு வந்திடலாம்.
@@@@@
அடடா 'மாகாணம்'..அருமையான தலைப்புடா. பெரிய நாயகயர்களை வச்சு அவுங்களுக்கு சம்பளம் குடுக்க முடியாது. எல்லாம் புதுமுகங்களாப் போட்டு பத்துக் கோடில 'மாகாணம்' படத்தைத் தயாரிச்சா.அதை அமேசான் பிரைம் வீடியோவுக்கு இருப்பத்தியஞ்சு கோடிக்கு வித்திடுடலாம். உலகம் பூரா அமேசான் சந்தாதாரர்கள் இருக்கிறாங்க. கண்டிப்பா வசூல் வேட்டையாடிடுவாங்க. விளம்பரச் செலவையும் அவுங்களே பாத்துக்குவாங்க..வெள்ளி விழாக் கொண்டாட்டமும் அவுங்களே நடத்தி அதிலயும் நல்லா வசூலாகும்.
@@@@@@
வெற்றி. வெற்றி. 'மாகாணம்' வெற்றி.
@@@@@
ரொம்ப சந்தோசம் அண்ணே.