மருத்துவ வெண்பா - மயில் கறி - பாடல் 64

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர்களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும். மயில் தேசியப் பறவையாயிருப்பதாலும், முருகனின் வாகனமாகக் கருதப்படுவதாலும் இப்பறவையை யாரும் கொல்லக் கூடாது. கொல்வது சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும்.

நேரிசை வெண்பா

சூலைப் பிடிப்புகளைச் சோரிவளி யைப்பித்த
வேலைச்சி லேட்டுமத்தை வீட்டுங்கால் – நூலொத்த
அற்பவிடை மாதே அனலா மயிலிறைச்சி
நற்பசியுண் டாக்கு நவில். 64

- பதார்த்த குண விளக்கம்

பொருளுரை:

நூல் போன்ற சின்னஞ்சிறு இடையை உடைய பெண்ணே!

மயில் இறைச்சியை உண்பவர்களுக்கு உஷ்ணத்தைக் கிளப்பும். நல்ல பசியை உண்டாக்கும்.

வலிபதார்த்த குண விளக்கம் தரும் மூட்டுப் பிடிப்பு, சோரிவளி, பித்தம், அதிக கபம் இவைகளை விரட்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jun-20, 9:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே