சிந்திக்கத் தெரியாதவனல்ல நான் நண்பா

வாழ்க்கை...
பந்தய மைதானம்
கிடையாது...
வாழ்க்கை..ஒரு..
அழகான சிறிய பயணம்..
போய் சேரும் இடம்,,
எல்லோருக்கும் ஒன்றுதான்...
நடுவில் தான் எவ்வளவு
பிரச்சனைகள்!...
ஆனாலும்...
பயணம் மட்டும்
நிற்பதே இல்லை...
அனைவருக்கும்...
உரிமை உள்ளது...
அவரவர் வாழ்க்கையை... அவரவருக்குப் பிடித்ததுபோல்,
வாழ்வதற்கு...
உங்கள் அறிவுரைகள்,
தேவைபடாது...
சிந்திக்கத் தெரியாதவன் அல்ல நான்...
அனுதாபமும்,
தேவையில்லை...
தேவையெல்லாம்,
கடந்து செல்கையில்...
சினேக புன்னகை..
ஒன்று மட்டும் போதும்..
என்னை...
உயிர்ப்பாய் வைத்துக் கொள்ள...