குடி கெடுப்பர்

குடி கெடுப்பார்

ஊசிக்கா தில்நுழை ஒட்டகம் ---. பைபிள்
நாசியோக வாசி அறியார் அவரும்
பேசும் பலகட்சி பேய்கள் -- இந்த
வாசமிலா பூக்களை மொய்ப்பதேன் வண்டு


குடிகெட்ட மட்டக் குடியினர் --- மற்ற
குடிகெட சூதுபேசி கெடுக்குங் குடியிவர்
தடிகொண் டடித்து விரட்டிடு --- நீயக்
கொடியார் பிடர்கால் தொடத் துரத்திடு

மாற்றி ஏமாற்றி பேசும் --- பேச்சு
காற்றில் கலந்திடு பச்சோந்திப் பேச்சு
மாறிபேச மக்கள் அறியார் -- என
மாற்றும்பகுத்தறிவு பாசறை அறிஞர்


தன்னைத் தமிழனில் லையென -- சொல்ல
தன்முடி யைவிரித் தாடுவன் பேயென
வள்ளலாய் பேசுமிக் கள்ளன்---. தமிழ்
வள்ளு வருஞ்சமணன் என்றானே பொல்லான்

எழுதியவர் : பழனிராஜன் (13-Jun-20, 6:56 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 72

மேலே