படைப்பு
சிலந்திக் கூடைப் பார்த்தேன்
அதன் செவ்வொழுங்கு என்னை
சிந்திக்கவைத்தது .....
தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்தேன்
சிறுவனின் ஆச்சரியம் என்மனதில்
சிந்திக்கவைத்தது......
ஒரே ஒரு சிலந்திக்கூட்டையோ
அல்லது தூக்கணாங்குருவியின் கூட்டையாவது
நம்மால் தத்ரூபமாய்ப் படைத்திட முடியுமா
நம்மால் சந்திரமண்டிலம் போக முடியும்!
சிரிப்பு வந்தது
நம் இறுமாப்பைக்கண்டு
நமக்கே புலனாகா
நம்முள் இயங்கும் நம் வரையறை
சிலந்தி தான் கட்டிய கூட்டை
தான் விரும்ப உள்ளுக்குள் இழுத்துக்கொள்ளும்
நம்மால் சிலந்திக்கூட்டை அழிக்க முடியும்
ஆக்க முடியாது ...................
படைப்பவன் யார் ? புரிந்தது