நகைச்சுவை துணுக்குகள் 8
உங்க பேரனுக்கு பூணூல் போடப்போறதா கேள்விப்பட்டேனே. எங்கே போடப்போறேள்?
எல்லாம் இடது தோள்பட்டைக்கு குறுக்கேதான்
*************
நரிக்குறவங்க முன்னேற நாம ஊக்குவிக்கணும்
என்னங்க சொல்றீங்க நீங்க? அவங்களே கஷ்டப்பட்டு ஊக்கு வித்துத்தான் பொழச்சிக்கிட்டு இருக்காங்க.அப்படி இருக்க நாம வேறே அவங்களுக்குப்போட்டியா ஊக்கு விக்க ஆரம்பிச்சா எப்படிங்க?
**************
அந்த நோயாளி ரொம்ப பக்திமான் போல இருக்கே?
எப்படிச்சொல்றே?
அடிக்கடி நரசிம்மா, நரசிம்மான்னு சொல்லிக்கிட்டு இருக்காரே.
அவர் கூப்பிடறது நரசிம்மசாமியை இல்லே. இங்க இருக்கிற நரசு அம்மாவை.
**************
பையன்: புது தமிழ் வாத்தியார் எப்பப்பார்த்தாலும் என்கிட்டே ஏதாவது செய்யுளைச்சொல்லி அதை விளக்குமாறு கேட்டுத்தொந்திரவு பண்ணிக்கிட்டே இருக்கார்
அம்மா : ஒரு விளக்குமாறு வாங்கறதுக்குக்கூட துப்பு இல்லாத வாத்தியார் உன் கிட்டே போய் விளக்குமாறு கேக்கறாரே. அசிங்கமாயிருக்கு கேக்கறதுக்கே
*************
வீடு வாடகைக்குக் கேட்க வந்தவர்: இந்த வீட்டிலே எலிகளோடே தொந்திரவு ஜாஸ்தியா இருக்குமோ?
வீட்டுக்காரர்: எதனாலே அப்படிக் கேட்கறீங்க?
வந்தவர்: வீடு வயற்காட்டிற்குப் பக்கமா இருக்கறதாலே கேட்கிறேன்
வீட்டுக்காரர்: அந்தக்கவலையே வேண்டாம். இங்கே பாம்புகள் நிறைய இருக்கிறதாலே எலிகளே கிடையாது
********************