இதயம் மாறாது

வண்ணங்கள் மாறலாம்
எண்ணங்கள் மாறாது !
நிழற்படங்கள் மாறலாம்
நிஜங்கள் மாறாது !
உருவம் மாறலாம்
உள்ளம் மாறாது !
ஆக்கங்கள் மாறலாம்
நோக்கங்கள் மாறாது !
கவியாக்கம் மாறலாம்
கருத்தாழம் மாறாது !
சிந்தனை மாறலாம்
சிந்தை மாறாது !
கனவுகள் மாறலாம்
கடமைகள் மாறாது !
சமுதாயம் மாறலாம்
சமூகநீதி மாறாது !
அகவை மாறலாம்
அடித்தளம் மாறாது !
நினைவுகள் மாறலாம்
நிலைப்பாடு மாறாது !
இருப்பிடம் மாறலாம்
இதயம் மாறாது !

பழனி குமார்
17.06.2020

எழுதியவர் : பழனி குமார் (17-Jun-20, 10:26 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : ithayam maaraathu
பார்வை : 312

மேலே