இறையொளி

விண்ணில் பயணிக்கும் மாபெரும் ஜோதி
விண்ணிலிருந்து மண்ணிற்கு ஒளிபெருக்கும் ஜோதி
கொஞ்சம் தன்னொளியை இந்துவுக்கும் ஈந்தஜோதி
வள்ளல் பெரும்ஜோதி அதுவே ரவியெனும் ஜோதி
ரவிதந்த ஜோதியில் இரவின் இருள்போக்கும்
இந்தஜோதி அதுவே விண்ணில் சந்திரன்
இப்பெரும் ஜோதிகளும் ஒருநாள் அணையும்
விண்ணில் உலவும் விளக்குகள் என்று நினைக்க
நம்முள் இருக்கும் இறுமாப்பு நீங்கிவிடும்
பிறப்பு இறப்பு இவைதரும் துன்பம் நீங்கும்
புதுமார்கம் நம்மெதிரே தோன்றும் சன்மார்க்கம்
என்றும் நிரந்தரமாய் ஒளிரும் இறையொளி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jun-20, 1:28 pm)
பார்வை : 84

மேலே