மாணவன்

பள்ளிப் பருவமோ
இணைய வழி யுத்தமாய்....
கல்லூரிப் பருவமோ
இணைய வழி முத்தமாய்....

சீரகம் செரிமானத்திற்கு........
சீர் அகம் தேவை ...
மாணவ "சரி" மானத்திற்கு....

"செல்லின" பிறப்பிலே பிணைப்பு....
"புல்லின" இறப்பிலோ கணைப்பு....
"மண்ணின" அழிப்பிலோ ..............
தெரியவில்லை எனக்கும்.........
கொட்டிச்செல்லும் நுண்ணுயிரி.....
வெட்டிக்கிளியோ கொல்லுயிரி....
பட்டைத் தீட்டிய மாணவனோ
பட்டன் தட்டும் செல்லுயிரி.....

எழுதியவர் : சேவியர் (18-Jun-20, 8:37 pm)
சேர்த்தது : xavier arun
பார்வை : 1224

மேலே