முகமூடிகள்

முகமூடிகள்



எல்லாம் சொல்லும் பல்லி விழுமாம்
கழனிப் பானையில் துள்ளி


அறிவோம் அகத்தியன் ஆங்ரச காசிப
அறிசன காதி பிரம்ம விசுவா --- வசிஸ்டர்
அறிவோம் சப்த முனிவீ ரமணியும்
அறியோம் நாம்வீ ரமாமுனி --- மூடியாம்

கடவுள் நிகர்முனி கடவுள் அழித்து
கடவுளை வேறாய் மறைத்தவன் --- முனியா
கடவுள் திருடிபின வைத்தான் மறுசிலை
கடம்பன் தமிழிலேன் மரியாள் ---. சரிதம்

தமிழை செந்தமிழ் என்றுமே கற்றார்
அமிழ்தென தேனென விற்றார் --- தமிழை
துமியும் பொய்யுரை செய்தியு மன்று
அமிழ்தையும் சாக்கடை அன்றே -- தெளித்தார்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
நகத்தில் வியாதி மருத்துவன் -- அறிவன்
அகத்தை முகமது சொல்லிடும் கருத்தாய்
நகமும் முகமும் காட்டிடும் --- பகைக்கும்

கிருஷ்ண பிள்ளை தமிழன் அறிவோம்
திருமண் நெற்றிப் பரம்பரை --- முன்னோர்
அறியா இணைந்தார் கிருத்வம் பின்னே
கிருத்வம் தொடர்ந்தார் பின்னடி --- வாழை

தமிழன் திருமண் திருமால் வணங்கி
தமிழர் கடவுள் துரோகி --. ஆனார்
தமிழில் சிலுவை புராணம் பாடினார்
தமிழை திருடி பிறமதம் வளர்த்தார்

உமறு புலவரின் முன்னோர் தமிழர்
உமறுமே அல்லா ஒதுவன் --- அராபில்
உமறும் வணங்கிடார் அல்லா தமிழில்
உமறை குரான்ஓ ததமிழில் --- விடாரே

தமிழ் ஜமா பந்திமைக் கூடா எவர்க்கும்
தமிழ்நாட் டிலொருவன் பாதிரி ---. என்று
தமிழைப் படித்தே னெனஆள் அமர்த்தி
தமிழில் முடித்தது தேம்பா வணிசொல்

யாரவர் கூடப டுத்துறங் கிட்டார
யாராண் டதத்தினம் வெள்ளைக் -- கிருத்வன்
பாரவன் உரைத்தலும் அம்பல மேறும்
யாரும் நமதுரை ஏற்றிடார் --- அம்பலம்

பாவலன் நாவலன் யிங்கிவர் பீற்றினர்
பாவம் கவிஞன் புலவனார் -- அறிவாய்
பாவம் முழுதொல் காப்பியம் அறியான்
பாவம் இலக்கியம் கற்றான் -- இல்லை

அரசனும் மெச்ச அவளே அரம்பையாம்
பிறரும் சொல்லா திருந்தால் --- சாவர்
அரம்பையாம் வீரமா நல்முனி கேளும்
அரகரா முனிவனாம் பாரும் -- அவனும்

கடவுள் முனியே கடவுளா சொல்லிவர்
கடவுளை வேறாய் மறைத்தவன் --- முனியா ?
கடவுள் திருடிபின் வைத்தான் மறுசிலை
கடம்பன் தமிழிலேன் மரியாள் ---. சரிதம்

எழுதியவர் : பழனிராஜன் (19-Jun-20, 12:09 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 502

மேலே