புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 1 ---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௧

1. உனக்குப் பசி என்றால் வேலை தேடு
ஊருக்கே பசி என்றால் போராடு.

2. தன்மானம் இல்லாத மனிதன்
எவனோ?... ஒருவன் ஆட்டி வைக்கும்
பொம்மையாகவே இருப்பான்.

3. அநாதைகள் பிறப்பதில்லை உருவாக்கப் படுகிறார்கள்.

4. தனி ஒருவனுக்கு நேரும் துன்பம்
விரைவில் உன்னையும் தொடும்
அதற்கு முன்னே அதன் வேரைப் பிடுங்க போராடு.

5. தனியாக வாழ்வது சுதந்திரம் இல்லை அதுதான் உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை
அமைதி இருக்கும் அன்புக்காட்ட ஆள் இருக்காது.

6. தனியாக ஒருத்தன் போராடும் போது சிரிப்பாக இருக்கும்
அந்த இடம் நாளை உனக்காகக் காத்திருக்கும்.

7. உள்மனம் திருந்தாமல் ஊரைத் திருத்த முடியாது
ஏன்?... தன் வீட்டையே திருத்த முடியாது.

8. உரிமையைப் பறிப்பவர்களிடம் கடமையை எதிர்பார்க்க முடியாது.

9. ஆட்சியில் அமர்ந்து விட்டால் பூனையும் புலியாகிக் கடிக்கும்
இறங்கி விட்டால் புலியும் பூனையாகவே இருக்கும்.

10. நேர்மையாக உழைப்பவன் ஊருக்குள் ஒருத்தனாய் வாழ்கிறான்
ஏமாற்றிப் பிழைப்பவன் ஊருக்கே முதலாளியாய் வாழ்கிறான்.

தொடரும்...

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (19-Jun-20, 10:52 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 377

மேலே