அப்பா 🙏

தந்தையர் தின கவிதை

அப்பா 🙏

எனது முதல் கதாநாயகன்.
தான் கானாத உலகத்தை
தன் பிள்ளை காண
எறும்பு போல் உழைத்து
தேனீ போல் சேமித்த
என் அப்பா.

கண்டிப்பு கண்களில் இருந்தாலும்
பாசத்தை அருவி என மனதில் தேக்கி வைத்திருக்கும் நல்ல உள்ளம் படைத்த என் அப்பா.

தூக்க முடியாது பாரத்தை சுமந்து
சரியான இடத்தில் வைத்து
என்னை
நேர் கோட்டில்
பயனிக்க வைத்தது
என் அப்பா.

கண்ணாடியில்
என் முகம்
கானும் போது
அதில் தெரிவது நான் அல்ல,
என் அப்பா.

தன் உடல், பொருள், ஆவி, அனைத்தும் எனக்காக தியாகம் செய்து
என்னை உருவாக்கிய
என் அப்பா.

என் வாழ்க்கையின் வெற்றியே
அவர் வெற்றியாக கருதிய
உயர்ந்த உள்ளம்
என் அப்பா.

ஆண்டவன், கடவுள், சாமி இந்த வார்த்தைகளின்
முழு உருவம்
என் அப்பா.

- பாலு.

எழுதியவர் : பாலு (20-Jun-20, 8:04 pm)
சேர்த்தது : balu
பார்வை : 3970

மேலே