சிறந்த ஹைக்கூ கவிதை
💥💥💥💥💥💥💥💥💥💥💥
*குறுங்கவிதை*
மரத்திலிருந்து
திருட முடியவில்லை
நிழலை
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
மதம் இல்லாமல்தான்
வாழ்ந்து வந்தது
யானை காட்டிலிருக்கும் வரை
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
இயற்கையோடு வாழ்வதால்
மருத்துவமனைக்கு போவதில்லை
காட்டு விலங்குகள்
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
தீட்டிய மரத்திலேயே
பதம் பார்க்கிறது
மரங்கொத்தி
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
பூனை குறுக்கே சென்றதால்
திரும்பி போகவில்லை
வேட்டைக்கு போகும் புலி
*கவிதை ரசிகன்*
💥💥💥💥💥💥💥💥💥💥💥