புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 5---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௫

41. உன்னைப் பற்றி முதலில் யோசி
பின் மற்றவர்களைக் குறை சொல்.

42. படித்தவனுக்குச் சரியான வேலை
உழைத்தவனுக்குச் சரியான கூலி
இரண்டும் கிடைக்காத வரை நாடு முன்னேறாது.

43. பகை என்ற நெருப்பை அணைத்துவிடு இல்லை அழித்துவிடு
அதுவரை உன்னைச் சுட்டுக் கொண்டே இருக்கும்.

44. உன் பலவீனத்தைப் பலமாக்கு
அதுவே உனக்கான வெற்றி.

45. உதவி செய்து பழகு
அது உனக்கும் ஒருநாள் கிடைக்கும்.

46. துன்பத்தில் துணை நின்றவரை மறப்பது இறப்பதற்குச் சமம்.

47. வெற்றியோ?... தோல்வியோ?...
களத்தில் இறங்கி ஏற்றுக்கொள்
எதுவும் நிரந்தரம் இல்லை
அதை மனதில் ஏற்றிக்கொள்.

48. பிரச்சனையில் இருந்து தப்பித்தோம் என்று ஓய்ந்திடாதே
அதன் வேர் இருக்கும் வரை
பிரச்சனைகள் துளிர்த்துக் கொண்டே இருக்கும்.

49. ஒரு பொய்யினால் உண்டாகும் சந்தோசத்திற்காக
ஒவ்வொரு நொடியும் பொய்களைச் சொல்லி நடித்தே ஆக வேண்டும்.

50. இலக்கை அடைய முதலில் வழியை உருவாக்குப்
பிறகு பயணம் செய்.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (23-Jun-20, 11:17 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 103

மேலே