ஊரடங்கு
ஊரடங்கு
கொரோனா தொற்றுப்
பரவல் தடுக்க
போட்டது அரசு
ஊரடங்கு சட்டம்!
நின்று போனது வாகன ஓட்டம்!
குன்றிப் போனது மனிதர் நடமாட்டம்!
அடங்க மறுத்து
அழிச்சாட்டியம் செய்கிறது
அனுதினம்
அன்றாடங்காய்ச்சிகளின்
அடிவயிற்றில்
அகோரப் பசியின்
ஆட்டம் மட்டும்...
போடுவது யாரோ
அவர்பசி அடக்கும் சட்டதிட்டம்!
அவர் பசியின் வாட்டம்
ஓட்டினாலே ஊரடங்கு வெல்லும்
இது திட்டவட்டம்!