பழகிக் கொள்வோம்

படி படி படியாய் படிப்பை புரிந்து
உழை ஒவ்வொரு செயலையும் உணர்ந்து
நடி நயவஞ்சக மனிதரிடம் கோழையாய்
செய் சரி என்று மனதிற்கு உணர்ந்ததை
உடை உண்மைக்கு விரோதமான எதனையும்
தடு உயிர்களுக்கு ஊறுவிக்கும் எதனையும்
கொடு துன்பத்தைப் போக்கும் எவற்றையும்
நில் நடுநிலை தவறாமல் வாழ்வதற்கு
இகழ் ஏமாற்றுவோரின் மனங்கவர்ந்த நட்பை
கொள் எந்நாளும் மகிழ்வான மனதை
புசி உடலுக்கு உன்னதந்தரும் உணவை
மற கோபமூட்டும் கேடு நிறைந்த செயலை
எடு விரும்பியதை ஈடேற்றும் முயற்சியை
படு உறங்குவதற்கு உரிய நேரத்தில்
கேடு பிறருக்கு துன்பம் விளைவிக்கும் எண்ணங்கள்
நடு பன்னெடுங்காலம் பலன் தரும் விருட்சத்தை
நாடு நலமோடு நம்மை உயர்த்தும் நிகழ்த்திகளை
விடு நம்முள் குடிகொண்ட இயலாமையை
- - - - - - -நன்னாடன்...

எழுதியவர் : நன்னாடன் (23-Jun-20, 9:10 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : palakik kolvum
பார்வை : 88

மேலே