நெடியவள்
பெண்ணவளைக் கண்டு விட்டால்
கண்ணிரண்டும் அவளிடத்து தாய் கண்ட சேய் போலப் பிரிந்து வர மறுக்கிறது
என்ன தான் செய்தாளோ நெடியவள் என் மனதினைத் தான்
தேடித் தேடிப் பார்க்கிறான் என்னை நானும் என்னிடமே
ரதியவளோ ஏளனமாய் புன்னகை தான் பூத்து விட்டு
அவளிடம் நான் தொலைந்ததை ஓர் பார்வையிலே உணர்த்துகிறாள்
ஆனால் பதியவளோ உணரவில்லை நான் தொலைந்ததே அவ்விழியிலென...