புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 6---

புத்தன் வீட்டுப் பூக்கள் - 6
51. உன்னுடைய அனுபவங்கள் மற்றவர்க்குத் தத்துவங்கள்.
52. உயிரை வாழ வைக்கும் தண்ணீருக்காக
உயிரை எடுக்கும் நேரம் தூரமில்லை.
53. நீ வீணடிக்கும் ஒவ்வொரு துளி நீருக்கும்
நாளை கண்ணீர் சிந்த காத்திரு.
54. நான் இல்லை என்றால் நீங்கள் இல்லை
அன்றாடம் படம் பிடித்துக் காட்டுகிறது நீர்த்துளி.
55. தண்ணீரை இன்று நீ பாதுகாத்தால்
நாளையும் உன் உயிர் காக்கும்.
56. நேற்று இலவசம், இன்று வியாபாரம், நாளை போர்க்களம்
தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்...
57. நடந்து பழகாதவனுக்குச் சிறு தூரமும்
தொலைவாகத் தான் தெரியும்.
58. விளைந்ததை விற்றவன், விளை நிலத்தையும் விற்கிறான்
சூழ்நிலையால்... சூழ்ச்சியால்...
59. கொள்கை சரியில்லாத கட்சியில்
குழப்பங்களும் குற்றங்களுமே அதிகம்.
60. நீ செய்த நல்லது உன்னைத் தொடரும்
நீ செய்த கெட்டது உன்னைத் துரத்தும்.
தொடரும்...
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..