போலிகள்

நிஜம் எது பிம்பம் எதுவோ, காணும் கட்சியில் கலங்கம் எதுவோ
என்விழியே என்னை குருடன் ஆக்கியதோ
எதை தான் நான் இங்கு நம்பி துலைப்பதோ
கனவென நான் கண்மூடி கிடக்கிறேன்
கருவிழியை ஏன் கருக்கி விட்டு போகிறாய்
கானல் நீராய் எல்லாம் மறைந்திட
எல்லாம் பாலைவன பூச்செடி ஆகிட
மெய்யென எண்ணி நான் கனவு கோட்டைகள் அமைக்க
திடீரென பூகம்பம் வந்து ஆசையை தகர்க்க
முகமூடி சூடிய உன்னை முகம் என எண்ணினேன்
மூச்சில் கலந்திட்டாய் என நான் முட்டாளாய் சிந்தித்தேன்
இருளில் தள்ளி என்னை ஏளனமாய் சிரித்திட்டாய்
கலங்கி நான் ஒடுங்கி வாடிட
கண்ணே ஏன் என்னை தனியே விலகி சென்றாய்
விளக்கம் வேண்டாம் விளங்கியது எனக்கு
நிஜமிலா நிழலே நீயும் ஆனாய் போலி