மழலை பருவம்

அழகிய மழலை பருவம்

பூக்கள் திருடும்

தேனீயாய் ஓடித் திரிந்த

மழலை பருவம்.


மழை மேகத் தென்றலாய்

மனதை விட்டு நீங்கா

மழலை பருவம்.


காலை பனித்துளி

காய்ந்து போகும்முன்

அதிகாலை விடியலை

அழகாய் ரசித்து

சில்லென தென்றல்

தேகம் தொட்டணைக்க

பாடித் திரிந்த சின்னஞ்சிறு

மழலை பருவம்.


சேற்றில் விளையாடி

கனிகள் களவாடி

காக்க கடிக்கடித்து

பகிர்ந்துண்டு பருகிய

மழலை பருவம் .


பசுமை மாறா

பனித்துளிபோல்

விழிகளில் சாரல்

வரவழைக்கும்

அழகிய மழலை பருவம்.

எழுதியவர் : நிஜாம் (24-Jun-20, 12:00 pm)
சேர்த்தது : நிஜாம்
Tanglish : mazhalai paruvam
பார்வை : 590

மேலே